Tuesday, October 20, 2009
கத்தரிக்காயும் காணாமல் போகும் வண்ணத்து பூச்சிகளும்

அன்று பொழுது அப்படி விடியும் என தரம்பாலின் மனைவி நினைத்திருக்கமாட்டார். ஹரியானாவில் தன்சு என்ற சின்னசிறு கிராமம் எல்லா இந்திய கிராமங்களை போலவும் மிக அமைதியான எளிமையான வாழ்வையும் அதனூடே சின்ன சின்ன சந்தோஷங்களையும் சுமந்து கால நீட்சியில் பயணித்துக்கொண்டிருந்து.ஆனால் கொஞ்சம் நாட்களாகவே எல்லாம் மாறிவிட்டது ஏதோ ஒரு மாய சுழல் சுற்றிவளைத்துக்கொண்டிருநதது தன்சுவவை.தரம்பாலின் குடும்பத்திற்கு நிகழ்ந்தது கிராமத்தில் ,பக்கத்து கிராமங்களில் பரவலாக நடந்துக்கொண்டுதான் இருந்தது யாருக்கும் ஒன்றும் புரியவிலை.அந்த நிகழ்வுகளின் பிண்ணனி என்னவென்று யாருக்கும் தெரியவிலை.அன்று காலை மாட்டு தொழுவத்திற்கு வந்த போது அவர் இடிந்துதான் போனார். அவர்களின் வாழ்வாதாரமான,மாடு இறந்து கிடந்தது.
ராம் நிவாஸின் மாடு சினைதரித்ததிலிருந்தே பல பிரனைகள்.பல கஷ்டமான நாட்ளுக்கு பிறகு குறைபிரவத்தில் ஒரு கன்றை ஈன்ற அந்த மாடு தன் குறைபிரசவ கன்றோடு இறந்துவிடது.
பவன் தெனிஜாவுக்கு உடல் முழுவதும் எரிச்சலுடன் கூடிய ஒருவித சரும ஒவ்வாமை.பவனுக்கு புரியவிலை. எதனால் இப்படி என தெரியவில்லை பவனுக்கு.

இவர்கள் அனைவரையும் இணைக்ககூடிய ஓரே விசயம் BT பருத்தி.மரபனு மாற்றம் (Genetically modified) செய்யப்ப்ட பருத்தி.மான்சாண்டோ என்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்தின் மரபனு மாற்றம் செய்யபட்டசந்தை பொருள் அது . Bacillus Thuringenesis(BT) என்ற பாக்டீரியாவின் ஜீன் உயிர் தொழில்நுட்ப யுக்தியால் பருத்தியினுள் செலுத்தப்பட்டு உருவாகும் புதிய வகை பருத்திதான் BT-பருத்தி. (சில விஞ்ஞானிகள் எப்பொழுது வேறு உயிரின் ஜீனை தனக்குள் வாங்கிக்கொண்டதோ பிறகு அதை "பருத்தி" என்று அழைப்பதே தவறு அது ஒரு புதிய உயிரினம் என்கிறார்கள்)BT பாக்டீரியாவின் சில தன்மைகளை தனக்குள் வைத்திருக்கும் BT பருத்தியால் விவசாயிக்கு என்ன நன்மை? பருத்தியை தாக்கும் நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ளும் திறன் இருக்கும் இதனால் பூச்சி மருந்துகள் அடிக்கதேவையில்லை.மகசூல் அமோகமாக இருக்கும் என்றது மான்சாண்டோ.குறைந்தவிலையில் விதைகளை வாங்கி நல்ல மகசூலால் பெரிய லாபம் அடையலாம் என நினைத்த இந்திய விவசாயிகள் அதிக வட்டிக்கு வாங்கி செய்த முதலீடுகளின் முடிவு பெரிய நஷ்டம். தொடந்தது விவசாயிகளின் தற்கொலை,ஆடு,மாடுகளின் மரணம்,மனிதர்களுக்கு ஒவ்வாமை.
இந்த அவலங்கள் தெடர்ந்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில்-
மரபனு மாற்றம் செய்யப்பட்ட BT-கத்தரிக்காயை மைக்கோ[Maharashtra Hybrid Seeds Company Ltd.(Mahyco)]என்ற நிறுவனமும் தமிழ்நாடு வேளான்மை பல்கலை கழகமும் சந்தையில் விட தயாராக இருக்கின்றன.மத்திய அரசின் Genetic Engineering Approval Committee (GEAC), இந்த ஆராய்சியின் விளைவுகளை ஆதரித்து BT-கத்தரிக்காயால் மனிதருக்கோ,பிற உயிரினங்களுக்கோ,சுற்றுசூழலுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை என சான்றளித்திருக்கிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக துணைவேந்தர் "எந்தவித தொந்தரவுமிலை தாராளமாய் வாங்கி சாப்பிடுங்கள் BT கத்தரிக்காய்" என்கிறார்.

ஆனால் BT பருத்தி தந்துள்ள அனுபவமும் உலகம் தழுவிய விஞ்ஞானிகளின் அபாய எச்சரிக்கையும் பல உலக நாடுகளின் மரபனு மாற்றம் பெற்ற உணவு(Genetically Modified Food)குறித்த தயக்கமும் நம்மை "SAY NO TO GENETICALLY MODIFIED FOOD " என சொல்லவைக்கிறது.கிரீன்பீஸ் அமைப்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மரபனு மாற்றப்பட்ட கத்தரிக்காய் குறித்து மைக்கோ சமர்பித்த ஆய்வு அறிக்கைகளைப் பெற்று, ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து கருத்து அறிந்தன.மைக்கோவின் ஆய்வுகளை மறுஆய்வு செய்த GILLES-ERIC SERALINI என்ற பிரெஞ்ச் விஞ்ஞானி முன் வைக்கும் எண்ணங்கள் சில:
1.நோய்கிருமிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளை( Antibiotic) செயல் புரிய முடியாமல் செய்யும் தன்மை BT-கத்தரிக்காயில் ஊடுருவியுள்ள BT ஜீனின் உள்ளதால் மனிதனின் நோய்க்கு கொடுக்கப்படும் (முக்கியமாக Neomycin,Streptomycin) போன்ற மருந்துகள் செயல்படமுடியாமல் போகும்.
2. BT கத்தரிக்காயில் உள்ள புரதம் (Crystal [Cry] proteins) மனித உடலுக்கு தீங்கை விளைவிக்ககூடிய நச்சு தன்மை உடையது.
3.இந்த ஆய்வு 90 நாள்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. நீண்டகால ஆய்வுகள் இருந்தால்தான், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கான காரணியாக மரபனு மாற்ற கத்தரிக்காய் மாறுகிறதா என்பதை அறிய முடியும்.
4.சுற்றுபுற சூழலின் சமனை அழிப்பதில் இந்த மரபனுமாற்ற தாணியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுற்றுப்பகுதிகளில் இருக்கும் சாதாரணப் பயிர்களை இவை பாதிக்கின்றன. மகரந்த தூள்கள் காற்றில் பரவுவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மரபணு மாற்றப் பயிர்களின் விளைவாக, இயற்கையில் இருந்து வரும் உயிர்ச் சங்கிலித் தொடர் சீர்குலையும் ஆபத்தும் ஏற்பட்டிருக்கிறது. சில பூச்சிகள், புழுக்கள் ஒரேயடியாக இல்லாமற்போய்விட்டால், அவற்றை உன்டு உயிர் வாழும் சில வகைப் பறவைகள் இல்லாமற் போய்விடும். அவற்றின் அழிவு, தொடர் விளைவை ஏற்படுத்தும். மரபனு மாற்றம் பெற்ற தாணியம் விளைந்த நிலங்களை சுற்றி அமெரிகாவில் கொத்து கொத்தாய் வண்ணத்து பூச்சிகள் இறந்து போயின. சொல்ல முடியாது இந்த நிலை நீடித்தால் நாமும் நம் வண்ணத்து பூச்சிகளை இழக்கலாம்.

5. மான்சாண்டோ போன்ற விதை நிறுவனங்கள் தாங்கள் விற்கும் விதைகளில் Terminator என்ற தொழில் நுட்பதத்தை பயன்படுத்துகின்றன.இதனால் இந்த விதைகளிலிருந்து விளையும் தாணியங்களிலிருந்து பெறப்படும் விதைகளை மீண்டும் பயன் படுத்தமுடியாது.அவைகள் மலட்டு விதைகளாக இருக்கும். எனவே விதைகளுக்கு நாம் மீண்டும் விதை நிறுவனத்தையே சார்ந்திருக்கவேண்டும்.இதனால் விதை,தானியங்கள் மீதான சுதந்திரம் விவசாயிடமிருந்து பறிக்கபடும்.உணவு உற்பத்தி ஒரு தனி நிறுவனத்தின் ஏகபோக உரிமையாகக்கூடும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவில் எந்த விவாதமும் இல்லாமல், பன்னாட்டு கம்பெனிகளும் வேளாண் பல்கலைக் கழகங்களும் அரசு ஆதரவுடன் மரபணு மாற்ற பயிர்களைப் பரப்புவதில் இறங்கியிருக்கின்றன. அரசியல் கட்சிகளைப் பொறுத்த மட்டில் இப்படிப்பட்ட விஷயங்கள் பற்றி தெளிவான ஆராய்ச்சியோ கொள்கை முடிவுகளோ கிடையாது.மரபனு மாற்றுக் கத்தரிக்காயின் வர்த்தக உற்பத்திக்கு அப்படியென்ன தேவை இருக்கிறது? என்று கேட்டால் அதற்கு கிரீன்பீஸ் அமைப்பினர் சொல்லும் முதல் காரணம், இதன் மூலம் காப்புரிமை என்கிற பெயரில் விதைகளை இந்திய விவசாயி பயன்படுத்தும்போதெல்லாம் இதை அறிமுகப்படுத்திய பன்னாட்டு நிறுவனத்துக்கு "ராயல்டி' செலுத்தியாக வேண்டும். இரண்டாவதாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனில் மரபனு மாற்றப்பட்ட உணவுப் பொருள்களுக்கு வரவேற்பில்லை. அங்குள்ள விவசாயிகளும் அதை விரும்புவதில்லை. ஆகவே அவர்களது தொழில்நுட்பத்தை இந்தியாவில் விற்க முயற்சிக்கிறார்கள். நாம் விழித்துக்கொள்வோம் நம் வண்ணத்து பூச்சிகள் தொலைந்து போகும் முன்.
மேலும் புரிதலுக்கு:
http://fbae.org/2009/FBAE/website/bt_cotton_deaths_updates.html
http://www.countercurrents.org/sharma040908.htm
http://www.rense.com/general86/doct.htm
http://www.gnani.net/index.php?option=com_content&task=view&id=78&Itemid=9
Subscribe to:
Post Comments (Atom)
Pages
பகுப்பு
- ஆளுமை (4)
- கவிதை (6)
- குறும்படம் (1)
- சிறுகதை (1)
- சுற்றுசூழல் (5)
- திரைப்படம் (5)
- தொழில்நுட்பம் (4)
- நடப்பு (1)
- புத்தகம் (2)
Powered by Blogger.
4 comments:
அன்புடன் மார்த்தாண்டனு்ககு வாழ்த்துகள். வலைப்பூ அருமை. தாங்கள் வலைப்பூவில் எழுதியுள்ள செய்தி அதைவிட அருமை. மிக நல்ல காரியம் செய்துள்ளீர்கள். வாழ்த்துகள்.
மக்களை பற்றி கவலையேபடாத ஆட்சியாளர்களை பெற்றிருக்கும் நாம். இன்னும் எத்தனை எத்தனை துயரங்களையும் அவலங்களையும் எதிர்கொள்ளப்போகிறோம் என்று தெரியவில்லை
மர்பீனி மாற்ற காய்கள் , மான்சான்டோ நிறுவனம் பற்றிய உங்கள் பதிவு இது குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகப்படுத்தும் நன்றி தோழர்
இளங்குமரன்,சீ.பிரபாகரன்,முனைவர் இரத்தின புகழேந்தி எல்லோருக்கும் என் நன்றி.
Post a Comment