Tuesday, December 1, 2009
கரி படிந்த கைகளும், கோபன்ஹேகன் நகரமும்.
இந்த பதிவை மீள்-பதிவு செய்த tamilmedia.com இணைய தளத்திற்கு நன்றி
எல்லா மனித செயல்களுக்கு பின்னும் ரகசியமாய் ஒளிந்துக்கொண்டிருக்கிறது தன் நலம் சார்ந்த இயக்கம். எல்லோருக்குமே தன் எதிரே நிற்கும் மனிதனின் செயல்களுக்கு பின் இருக்கும் ரகசிய
நிலவரைகளின் படிகட்டுக்கள் தெரிந்தாலும் எல்லோருமே தெரியாதது போல பாவித்துக்கொள்கிறோம். நமக்கு நம் நிலவரை முக்கியம்! ஒரு பொது வியசத்திற்காக கூடும் பொழுது மனிதனின் இந்த உள்ளார்ந்த அம்சம் அவனின் பகீரத ப்ரயத்தனைகளை மீறியும் தன்னை வெளிப்படுத்திக்கொண் டுவிடுகிறது. உலக வெப்பமயமாதல் குறித்த சர்வதேச மாநாடு ( கோபன்ஹேகன் – டிசம்பர் 7-18 ,2009 ) கூடும் பொழுது மனிதனின் இந்த கோரமுகம் வெளிப்படையாகவே தெரியலாம்.
பசுமைஇல்ல வாயுக்கள்(Green House gases) அதிக அளவில் வளிமண்டலத்தில் சேர்ந்து தங்கி அழுத்தமான போர்வையை உருவாக்கிவிடுவததால் பூமியால் உறிஞ்சப்பட்டு சிதறடிக்கப்படும் மீதமுள்ள சூரிய வெப்பம் வெளியேற முடியாமல் பூமியின் வளிமண்டலத்திலேயே தங்கி விடுவது பூமி வெப்பமயமாதலின் ஆதார பிரச்சனை. எனவே மனிதனின் பல நடவடிக்கையின் மூலம் வெளியேறும் பசுமைஇல்ல வாயுக்களின் அளவை குறைப்பதின் மூலம் வெப்பமயமாதலின் வேகத்தை மட்டுப்படுத்த முயல்கிறது உலகம். மிக எளிதாக தோண்றுவதைப்போல தெரியும் இந்த புள்ளியிலிருந்து கிளர்ந்து கிளை பரப்பி விரிகிறது அரசியலும்,சூழ்ச்சியும்,பதுங்களும், நிலவறை தந்திரங்களும்.
பசுமைஇல்ல வாயுக்களில் பிரதானமான கரியமில வாயும் பொருளாதார மேம்படும் நேரடியாக தொடர்புடையவை. ஒரு நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் பொழுது அந்த நாட்டின் தொழில் மற்றும் தனிமனிதனின் எரிசக்தியின் தேவை அதிகரிக்கிறது. எனவே கரியமில வாயுவின் வெளீயீடும் அதிகமாகிறது. ஒன்றுக்கொன்று முரண்பட்ட இந்த இரண்டு நவீன வாழ்வின் ஆதாரங்களை சமன் செய்வதில் இருந்து எழுகிறது வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையேயான கயிறிழுக்கும் போட்டி.
2005ல் இருந்து நடைமுறையில் இருக்கும் கியோட்டோ நெறிமுறை (KEYOTO PROTOCOL)யின் படி வளர்ந்த தொழிற் வளர்ச்சியடைந்த நாடுகள் 150 வருட கால தொழில் வளர்சி செயல்களால்தான் வளிமண்டலமானது பெரிதளவு பசுமை இல்ல வாயுக்களை கொண்டுள்ளது என்பதை கியோட்டோ நெறிமுறை கருத்தில் கொண்டு, வளர்ந்த நாடுகளுக்கு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாக்குதலை குறைப்பதற்கான அதிக பளுவை இந்த நெறிமுறை விதித்துள்ளது. இதன்படி, வளர்ந்த நாடுகள் 2012க்குள், பசுமைஇல்ல வாயுக்கள் வெளியாக்குதலை, 1990 ஆண்டில் ஆன அளவிலிருந்து 5.2% குறைக்க வேண்டும். வளரும் நாடுகள் இதிலிருந்து விதி விலக்கு அளித்தது இந்த நாடுகளுக்கு எந்தவித குறைத்தல் இலக்குகளை வைக்கவில்லை கியோட்டோ நெறிமுறை. மிக அதிகமான ( உலக கரியமில வாயு வெளீயிட்டில் கால் பங்கு) பசுமைஇல்ல வாயுக்கள் வெளியாக்கும் அமெரிக்கா கியோட்டா நெறிமுறையை நிராகரித்தது.

இந்த பிண்ணனியில் தொடங்கிறது கோபன்ஹேகன் மாநாடு. வளர்ந்த , தொழிற்புரட்சியின் முழு பலனையும் அடைந்த நாடுகள் , இன்றைய வளிமண்டல மாசுக்கு காரணமான அந்த நாடுகள் அதற்கான பெறுப்பை ஏற்றுக்கொள்ளமறுக்கின்றன. மட்டுமல்லாமல் இன்னும் முழு வளர்ச்சியை எட்டாத , மின்சாரமிலாத கிராமங்கள், வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களை கொண்ட வளரும் நாடுகளின் மீது பொறுப்பை சுமத்த பார்கின்றன. BASIC என அழைக்கப்படும் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளான BRAZIL,SOUTH AFRICA,INDIA,CHINA ஆகிய நான்கு நாடுகளும் ஒரு அணியில் திரள்கிறது. கோபன்ஹேகனில் வளர்ந்த நாடுகள் தங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எந்த பசுமை இல்ல வாயு வெளீயேற்ற குறைப்பு இலக்கிலும் (EMISSION TARGET) கையெழுத்திட மாட்டோம் எங்கின்றன இவைகள். அதே சமயம் உலக வெப்பமாதல் தடுப்பு நடவடிகைகளுக்கு எதிரான நாடுகள் அல்ல இவைகள். தனக்குதானே நிர்ணயித்துக்கொண்ட இலக்குகள் படி இவைகள் நடக்கும் என கூறிக்கொள்கின்றன. மேற்கத்திய நாடுகள் எப்போதும் போல இந்த நாடுகளை அடிபணிய வைக்க தன் எல்லா தசைகளையும் முறுக்கும்.
இந்தியாவின் நிலைப்பாடு, இந்த நிமிடம் ஒரு அற்புதத்தால் கரியமில வாயு வெளியேறுவது இயற்கை அனுமதிக்கும் அளவிற்கு குறைந்தால் கூட பூமி
வெப்பமாதல் தடுக்கமுடியாதது . அது ஏற்கனவே வளர்ந்த நாடுகள் செய்த காரியங்களின் விளைவு எனவே இன்றைய நிலைக்கு அந்த நாடுகளே பொறுப்பேற்க வேண்டும். இந்தியாவின் கரியமில வாயுவின் வெளியீடு அதன் மக்கள் தொகையை கணக்கிலெடுத்துக்கொண்டால் மிக,மிக குறைவு எனவே இந்த அளவிற்கு கரியமில வாயுவின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவேண்டும் என்கிற எந்த நாட்டு வற்புறுத்தலையும் அது ஏற்காது, தன் இலக்கை அதுவே நிர்ணயத்துக்கொள்ளும்.. இந்த நிலைப்பாட்டுடன் கோபன்ஹேகன் மாநாட்டுக்கு செல்லும் இந்தியா உலக நாடுகளிலிருந்து மிகுந்த எதிர்ப்பை சமாளிக்கவேண்டும். இந்த முறை அது சீனாவுடன் கை கோர்த்து செல்கிறது. வழக்கம் போல சீனா முதுகில் குத்தாமல் இருக்கவேண்டும். பார்ப்போம்.
மேலும் புரிதலுக்கு :
.
Subscribe to:
Post Comments (Atom)
Pages
பகுப்பு
- ஆளுமை (4)
- கவிதை (6)
- குறும்படம் (1)
- சிறுகதை (1)
- சுற்றுசூழல் (5)
- திரைப்படம் (5)
- தொழில்நுட்பம் (4)
- நடப்பு (1)
- புத்தகம் (2)
Powered by Blogger.

8 comments:
நல்ல பதிவு
நானும் இம்மாநாட்டைப் பற்றி பதிவிட்டிருக்கிறேன் பாருங்கள்
http://sidaralkal.blogspot.com/2009/11/blog-post_28.html
நன்றி றமேஸ். உங்கள் பதிவை படித்தேன். நன்றாக இருந்தது.
green house effect - ஐ பற்றி மிகவும் தெளிவாக
பாமரனுக்கு கூட புரியும் படி எடுத்து சொல்லி இருக்கீங்க..
நல்ல விளக்க பதிவு...
தொடர வாழ்த்துக்கள்...
நன்றி கமலேஷ்.
மிக அருமையான பதிவு. பெரிய விஷயத்தை அனவைருக்கும் புரியும் படி எழுதியிருக்கிறீர்கள். மாநாட்டில் ஏதாவது நல்லதாக நடக்கிறதா என பார்க்கலாம்
உங்கள் வருகைக்கு நன்றி மோகன்.
உங்களைப்போலவே நானும் காத்திருக்கிரேன். மாநாட்டு முடிவிற்கு.
good post, thanks for sharing
thanks Kuppan.Yahoo.
Post a Comment