Wednesday, March 31, 2010

ஒரு கவிதை

அதன் பின்னரும்






மூலம் தெரியவில்லை.

கிளை,கிளையாய் பிரிந்து

பெரு வெளி இருளில்

மறைகிறது

அதன் தடம்.

புரியவில்லை இன்னும்

வீட்டிற்குள் எப்படி புகுந்ததென.

தானே வந்திருக்க வாய்ப்பில்லை.

தந்திரம் என நினைத்துக்கொள்ளும்

என் சத்ருக்களின் தோளில்

பயணித்து வந்ததோ

தெரியவிலை.

இதன் இருப்பை

நானுணர்ந்துக்கொள்ளத்தான்

காலம் கொஞ்சம் பிடித்துவிட்டது

ஒரு வேளை

சுயம் பிறழ்ந்த ஓர் நாளில்

என் முதுகில் சுமந்து

நான் தான் வீட்டில் கிடத்தினேனோ?

இருக்கலாம்.

யாருமற்ற இரவொன்றில்

ஓசையின்றி

திசைகள் அற்ற வெளியில்

எறிந்து

திரும்பிய பின்னரும்

அகம் முழுக்க வீசுகிறது

பிண வாடை.

.

13 comments:

  1. நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  2. படமும் கவிதையும் அருமை

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கு நன்றி

    செல்வராஜ் ஜெகதீசன்
    சித்ரா
    றமேஷ்

    ReplyDelete
  4. ரொம்ப காத்திரமானதொரு கவிதை.நன்றி.

    ReplyDelete
  5. வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி மயில்ராவணன்

    ReplyDelete
  6. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  7. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  8. சத்ரு = எதிரி . சின்ன சின்ன வார்தைகளை தமிழ்படுத்துகையில் கவிதையின் ஆழம் கூடும். :)

    ReplyDelete
  9. கவிதை மிக அழகாக இருக்கிறது...

    படமும் மிக அழகான தேர்வு..அதுவே ஒரு கவிதை போல இருக்கிறது...

    உங்கள் கவிதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன்..மிக நன்றாக எழுதுகிறீர்கள்..

    அந்த உந்துதலில் உங்களின் அனுமதி இல்லாமலே உங்களை பதின் வயது நினைவுகள் என்னும் தொடர் பதிவிற்கு உங்களை அழைத்திருக்கிறேன்...

    அழைப்பை ஏற்று தொடர் பதிவினை தொடர்வீர்கள் என்றால் மிக்க மகிழ்வேன்.

    நட்புடன் -கமலேஷ்.

    ReplyDelete