Tuesday, September 6, 2016

ஜோக்கர்

ஜோக்கர் தாமதமாக ஒரு பார்வை


மனதை தொட்டுசெல்லும் எல்லா விசயங்களும் ஏதோ ஒரு விததில் ஒத்திசைவைக் கொண்டிருக்கின்றன சமசீர் அற்ற அல்லது ஒத்திசைவற்ற விசயங்கள் மனதை கவர்வதில்லை அவைகள் மனதிற்கு வெளியே நின்றுவிடுகின்றன. உருவமும் , உள்ளடக்கமும் இணைத்து உருவாக்கும் லயம் ஒரு படைப்பை மிக அழகியதாக்கி, இயல்பில் மனித மனத்தோடு நெருக்கமாகிவிடுகிறது. உருவமும் உள்ளடக்கமும் பிசிறுதட்டும் பொழுது அந்நியபட்டு போகிறது. ஒரு நல்ல உள்ளடக்கத்தை கொண்டுள்ளதாலேயே ஒரு படைப்பு நல்ல படைப்பாகிவிடுவதில்லை . தமிழ் சினிமாவில் வெளிவந்த சில திரைப்படங்கள் இப்படி நல்ல பெயரை எடுத்து விடுகின்றன. சமீப சேர்க்கை ஜோக்கர்.
தன் மனைவிக்கு ஒரு கழிப்பிடம் கட்ட, அரசாங்கத்தின் ஒரு திட்டத்தின் மூலம்  கட்ட நினைகிறார் மன்னர்மன்னன். அரசாங்கத்தின் எல்லா திட்டங்கள் போலவும் இதுவும் ஓட்டை வாளியில் எடுத்து செல்லப்படும் நீரைபோல சராசரி மக்களை வந்து சேரும்பொழுது வெற்று வாளியாகவே வந்தடைகிறது. மந்திரி முதல் கடைநிலை அரசாங்க ஊழியன் வரை எல்லோரும் திட்டத்திற்காக ஒதுக்கிய பணத்தை சாப்பிட்டுவிட வெறும் கழிவறை பேஸன் மட்டும் மிஞ்சுகிறது மன்னர் மன்னனுக்கு. அறைகுறையான அந்த கழிவறையிலேயே ஒரு மழை இரவில் சரிந்து விழுந்து கோமாவிற்கு சென்றுவிடுகிறாள் அவன் மனைவி. அதன் அலைகழிப்பில் மன்னர் மனபிறழ்வு உற்றவாகிறார் மன்னன்.  பஞ்சாயத்து மட்ட அரசியல்கூட அறியாத மன்னர் , மனபிறழ்வுக்கு ஆளான பின்னர் உலக அரசியல், கல்விகொள்கை, தண்ணீர் கொள்ளை , மணல் கொள்கை , உலக மயமான உணவு அரசியல் என எல்லாவற்றையும் பின்னி எடுக்கிறார் பின்னி.

படத்தின் முதல் பகுதி முழுக்க மனபிறழ்வுக்கு ஆளான மன்னர்மன்னன் தன்னை பிரெசிடெண்ட் என தன்னை  பிரகனபடுத்திக்கொண்டு மக்களுக்கு எதிரான , சமூக நலனுக்கு எதிரான எல்லா விசங்களையும் எதிர்த்து போராட்டங்கள் நடத்துகிறார். கிரேஸிமோகன் அல்லது எஸ்.வி.சேகர் வகையறா நாடகங்களில் வரும் துணுக்கு தோரணங்கள் ஒன்று தோண்றி மறைவதற்குள் அடுத்தடுத்து வந்து ரசிக பெருமக்களை சிரிக்க வைத்து மறைந்துபோகும் அந்த அந்த வினாடிகளை தவிர அவைகளுக்கு உயிர் கிடையாது. பிரெசிடெண்ட்  நடத்தும்  அத்தனை போராட்டங்களும்  பார்வையாளர்களை இப்படியாக கடந்து போய்விடுகின்றன. பார்வையாளன் பிரதிக்குள் ஊடுபாவ எந்த சந்தர்ப்பமும் கொடுக்காமல் தட்டையான அங்கத தொகுப்பாக முடிகிறது முதல் பாதி.
இயக்குனர் எதை சொல்லவருகிறார் இதையா அல்லது அதையா என பார்வையாளன் ஊசடாடிக்கொண்டிருக்கும் பொழுது கழிவறை வருகிறது. நல்லது இதன் மூலம் இயக்குனர் ஏதோ சொல்ல வருகிறார் என நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே கழிவறை விசயம் முடிந்து இயக்குனர் கருணைக்கொலை பற்றி நீள அகலத்திற்கு பேசுகிறார் . பின்னர் பிரெசிடெண்ட் மணல் லாரி மோதி கொலை செய்யப்படுகிறார். ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கும் மரபுசார் கதை சொல்லும் முறையாகட்டும் அல்லது ஒன்றுக்கொன்று தொடர்பற்ற காட்சிகளின் தொகுப்பாக கதை சொல்லும் மரபுசாரா முறையாகட்டும் இரண்டும் ஒரு ஒருன்மையை மையப்படுத்தியே சுழலும் . சிதறடிக்கிடக்கும் சரடுகளை ஒவ்வொன்றாக இழுத்து அதன் மையகுவியலை, அந்த படைப்பின் ஒருன்மையை  தன் வயபடுத்தும் பொழுது பார்வையாளன் பெரும் அனுபவ விகாசத்தை ஜோக்கர் தராமலே முடிந்துவிடுகிறது.
 திரைபடத்தில் நல்ல விசயங்கள் குரு சோமசுந்தரம் , பாவா செல்லதுரை, ரம்யா பாண்டியன் இவர்கள் நடிப்பு ,  படம் நெடுக கவனம் பெறும் ராஜூமுருகனின் வசனங்கள்.      


இயக்குனர் பார்வையாளனுக்கு எதையும் விட்டுவிடாமல் தானே முழுவதையும் பேசிக்கொண்டே இருக்கிறார். கடைசியில் பொன்னூஞ்சல் பார்வையாளர்களை பார்த்து பேசும் கோனார் தமிழ் உரை இயக்குனருக்கு தன் படைப்பின் மேல் இருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது பொன்னூஞ்சல் பேசுபவற்றையெல்லாம் படைப்பின் வழியாக பார்வையாளனை சென்றடைந்திருக்கவேண்டும் கோர்ட் போன்ற மாரட்டிய படங்களில் மிக சாதாரமான காட்சியாக தெரியும் ஒரு வழக்கறிஞரின் குடும்பம்  ஒரு உணவகத்தில் உணவருந்துவதோ , ஒரு மராட்டிய நாடகத்தை பார்ப்பதோ கூட மைய இழையோடு பார்வையாளன் இணைத்துப்பார்க்கவும் , வேறு சில பரிமாணங்களை உள்ளிடாக கொண்டதாகவும் பார்வையாளனின் பங்கை வேண்டிநிற்பதாகவும் இருக்கும். பார்வையாளனும் படைப்பும் உறவாடிக்கொள்ள இடமில்லாமல் ஒற்றை பரிமாண படைப்பாக சரிந்து விடுகிறது ஜோக்கர். 

நண்பர்கள்

Powered by Blogger.