சுயவிலாசம்

"நானும் கோபாலும் பழகத்தொடங்கிய நாளிலிருந்தே எங்கள் அன்றாட செயல்பாடுகளில் ஒரு இசைவை,லயத்தை கொண்டுவர வேண்டும் என
பேசியும்,  பல தடுமாற்றங்களிடையே செயல்படுத்தியும் இருக்கிறோம்.
ஒத்திசைவான தருனங்களும் நாட்களும் சந்தோஷம்  மிக்கதாகவே இருக்கிறது. எனினும் வாழ்க்கை எப்பொழுதுமே எண்ணனற்ற முரண்பட்ட  சாத்திய  கூறுகளுடன் உயிர்ப்புடன் காத்திருக்கும் பொழுது நம் செயல்பாடுகளை ஒத்திசைவான இயக்கத்துடன் நகர்த்துவது பெரிய சவாலாகவே இருக்கிறது. யோசித்துப்பார்க்கும் பொழுது பல நேரங்களில் நான் வாழ்வின் இந்த சவாலுடனான எதிகொள்ளலில் சரிந்தேயிருக்கிறேன். எனினும் ஏதாவது ஒரு உணர்வு என்னை மீண்டும் உயிர்ப்பித்து விடுகிறது. ஒரு பிரயாணம், ஏதோ ஒரு புத்தகம், நண்பனுடனான உரையாடல், ஒரு மலர், சக மனிதன் அல்லது ஒரு மழை நாள் என ஏதோ ஒன்றிடமிருந்து ஜீவனுள்ள அந்த தூண்டுதலை பெற்றுவிடுகிறேன். ... வீழ்ச்சியும்,உயிர்ப்புமாக ஓடுகிறது காலம் "

                                  -   எப்போதோ ஒரு நண்பனுக்கு எழுதிய கடிதம்.ஜெ,ஜெயமார்த்தாண்டன்,
சென்னைவாசி,
கணணி நிர்வாகத்துறையில் பணி.
தொடர்புக்கு : marthandan.j@gmail.comThis page is for info only. Do not Vote.

நண்பர்கள்

Powered by Blogger.