Thursday, November 26, 2009

நான்கு கவிதைகள்

                     1


இறைந்துக்கிடப்பவை

என்னுடையதல்ல,

உலுக்கி விழவைக்கலாம்தான்

என்னுடையதாகாது அதுவும்.

பாவை விளக்கின்

சாயலில் இமைமூடி

மோனத்தில் நிற்கையில்

கை ஏந்தலில்

விழக்கூடும்-

ஒரு புஷ்பம்

காலையின் தூய்மையுடன்-

எனக்காக.

 
 
 
                         2
 
 
வீடு திரும்பாத மேய்ப்பன்



தேடியலைந்து

மந்தையில் சேர்த்து

எண்ணுகையில்

குறையும்

மீண்டும் ஒரு ஆடு.

அவன்

வீடு திரும்பவே இல்லை.




                          3

விளம்பரம் பார்த்தேன்

நீ

தொலைந்து போய்விட்டதாக

இப்போதாவது

கண்டுபிடித்தார்களே






              4


   பிள்ளையார்


யாரும் இல்லை

வேணிற்கால வெக்கையும்

வெடித்த குளத்தையும் தவிர்த்து.

எப்போதாவது எட்டிப்பார்க்கும்

காக்கையும் கூட

காணம் இன்று

உறவுகள் அற்றவெளியில்-

விழுந்த அரச இலைகளை

எண்ணிக்கொண்டு

கழியும் பொழுது.




.

8 comments:

  1. //வீடு திரும்பாத மேய்ப்பன்//

    மிக அருமையான தோலுரிப்பு நண்பரே!

    ReplyDelete
  2. ரோஸ்விக்,
    நீங்கள் புரிந்துக்கொண்ட தொனியில் நான் எழுதவில்லை என்றாலும், ஒரு பிரதியை இப்படித்தான் புரிந்துக்கொள்ளவேண்டும் என சொல்லி உங்கள் சுதந்திரத்தில் நான் தலையிடமாட்டேன்.

    நன்றி ரோஸ்விக்.

    ReplyDelete
  3. நன்றி ஜ்யோவ்ராம். நீங்கள் தொடந்து படிப்பது உற்சாகமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. நல்ல வரிகள்!! கவிதைகள் வெண்ணெய் போல் லகுவாகச் செல்கின்றன!!!

    ReplyDelete
  5. வரிகளும்,
    கவிதையும்
    பேசுகிறது வாசகர்களோடு....
    மிகவும் நன்றாக இருக்கிறது....

    ReplyDelete